தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளியுலகிற்கு மசாஜ்... உள்ளே மஜா: 6 அழகிகள் உள்பட 9 பேர் கைது - திண்டுக்கல் தனியார் விடுதியில் விபச்சாரம்

மசாஜ் சென்டர் என்ற பெயரில் திண்டுக்கல்லில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு அழகிகள் உள்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தனியார் விடுதியின் உரிமையாளர் இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

By

Published : Dec 11, 2021, 8:48 AM IST

Updated : Dec 11, 2021, 10:58 AM IST

திண்டுக்கல்:மசாஜ் சென்டர் நடத்துகிறோம் என்ற பெயரில் சில தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தனிப்பிரிவு காவல் துறையினர் தனியார் விடுதி, மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வெளிமாநில அழகிகள் அறுவர் உள்பட 9 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறை கைதுசெய்தது.

காவல் துறை வழக்குப்பதிவு

தலைமறைவாக உள்ள தனியார் விடுதியின் உரிமையாளர்கள்

இது குறித்து நகர் வடக்கு காவல் துறை வழக்குப்பதிவு தனியார் தங்கும் விடுதியை நடத்திவரும் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றது. மேலும் தனியார் விடுதியின் உரிமையாளர் உள்பட இருவரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்

Last Updated : Dec 11, 2021, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details