திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'இந்தியாவில் சக மனிதர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு சாகக்கூடிய சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மனிதம் காக்கப்படுவதற்கு மாறாக ஒருவருக்கொருவர் மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டால் இந்த நாடு நாடாக இருக்காது.
நாம் எந்த மத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் முதலில் மனிதர்கள் என்பதை மறக்கக்கூடாது. தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் தேவர், தேவேந்திரர் சண்டை, மத்திய தமிழ்நாட்டில் அருந்ததியர், கவுண்டர் சண்டை, வட தமிழ்நாட்டில் ஆதி பறையர், வன்னியர் சண்டை. இப்படியே சாதி சண்டையிட்டு நமக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஹெச்.ராஜா போன்றவர்கள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அராஜகமாக பேசி வருகிறார்கள். ஆனால் காவல் துறையினர் ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை. மாறாக நெல்லை கண்ணன் போன்றவர்களை கைது செய்கிறார்கள். சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிற வேலையில் ஈடுபடுகிற இந்துத்துவா சக்திகளை கைது செய்ய மறுக்கும் அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க: CAA எதிர்ப்பு: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முகமது அபூபக்கர்