தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் ஆர்ப்பாட்டம்! - டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ்

திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தனது சகோதரியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் ஆர்ப்பாட்டம்
டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் ஆர்டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் ஆர்ப்பாட்டம்ப்பாட்டம்

By

Published : Aug 4, 2021, 11:02 PM IST

திண்டுக்கல்: சின்னையாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு படிக்க சென்ற இடத்தில் உடன் படித்த வடமதுரையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரது மனைவி நாகராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவர் மீது மனைவி புகார்

இது குறித்து தகவலறிந்த திவ்யாவிற்கும், ராஜேஷ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தனது கணவர் ராஜேஸ்வரன் படிக்கச் சென்ற இடத்தில் நாகராணி என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த ராஜேஸ்வரன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகராணியுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனையறிந்த நாகராணியின் கணவர் ராஜேஷ்கண்ணன் தனது மனைவியை ராஜேஸ்வரனிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தர்ணாவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட பெண்

இதனிடையே பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரனின் மனைவி திவ்யா, தனது சகோதரியான டிக்டாக் புகழ் லயா தர்மராஜ், தனது பெற்றோர் ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட லயா

இதனைக் கண்டு அங்கி வந்த காவல் துறையினர், அவர்களை கலைந்துசெல்ல கூறினர். அப்போது, லயா தர்மராஜ் தனது சகோதரியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தர்ணாவில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

பின்னர், அவர்களை சமாதானம் செய்த காவல் துறையினர், ராஜேஸ்வரன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து தர்ணாவை கைவிட்டனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details