தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு - திண்டுக்கல் அரசு மருத்துவமனை

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

By

Published : Oct 21, 2020, 7:19 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எஸ்.எஸ்‌ காலனியைச் சேர்ந்தவர் செளமி நாரயணன் (41). இவர் தனது மனைவி திவ்யா (25), சகோதரி சுபா (47) மற்றும் சுபாவின் மகன் ஸ்ரீராம் (15) ஆகியோருடன் காரில் தேனிக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது நிலக்கோட்டை அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதி நொருங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செளமி நாராயணன், திவ்யா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுபா மேல் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details