திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி நேற்று (செப் 24) சென்றது. பழனியை அடுத்த தாழையூத்து அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு, அருப்புக்கோட்டையை சேர்ந்த ருக்கிரபாண்டி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரி ஓட்டுநர் ரமேஷ் உள்பட பேருந்தில் பயணித்த 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.