தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் அருகே கோர விபத்து: மினி வேன் டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலி!

ஒட்டன்சத்திரம் தங்கச்சியாம்மாபட்டி அருகே மினி வேன், டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கச்சியாம்மாபட்டி அருகே விபத்து: மினி வேன் டீ கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலி!
தங்கச்சியாம்மாபட்டி அருகே விபத்து: மினி வேன் டீ கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலி!

By

Published : Jul 16, 2023, 11:10 PM IST

திண்டுக்கல்:தங்கச்சியாம்மாபட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மினி வேன் டீக்கடைக்குள் புகுந்ததால் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தானை சேர்ந்த ராம்குமார் என்பவர், கோவையில் இருந்து மதுரை நோக்கி மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அதேபோல் கள்ளிமந்தயம் தும்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சிவராஜ் என்பவர் அவரது அம்மாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக, அவரது தாயாருடன் ஒட்டன்சத்திரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டு இருந்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை தங்கச்சியம்மாபட்டி அருகே வரும்பொழுது மினிவேன் நிலை தடுமாறியுள்ளது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த சிவராஜ் மற்றும் அவரது தாயார் மீது மினி வேன் கடுமையாக மோதியுள்ளது. பின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் இடது புறம் இருந்த வி.ஆர்.எஸ் பேக்கரிக்குள் நுழைந்தது.

அங்கு கோயம்புத்தூர் பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் குடும்பத்துடன் அங்குள்ள பேக்கரிக்கு வந்துள்ளார். உடன் காரில் அவரது மனைவி சரஸ்வதி, அவருடைய உறவினர் பழனிச்சாமி மற்றும் அவருடைய மைத்துனர் விஸ்வநாதன் ஆகியோர் கோவையில் இருந்து காளையார்கோவிலுக்கு காரில் செல்லத்திட்டமிட்டு, உடன் பயணப்பட்டுள்ளனர்.

இதில் சரஸ்வதி மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் பேக்கரி அருகே இருந்த பாத்ரூமிற்குச் சென்று விட்டனர். பேக்கரிக்குள் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர் பழனிச்சாமி ஆகிய இருவரும் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி டூவீலரில் மோதி உள்ளே வந்த மினி வேன் இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். அதேபோல் டூவீலரில் வந்த சிவராஜ் உடைய தாயார் காளியாத்தாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சிவராஜ் மிகவும் கவலைக்கிடமான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்தால் சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அம்பிளிக்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக ஒட்டன்சத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். இந்த கோர சம்பவமானது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலை தடுப்பில் மோதிய கார் கவிழ்ந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details