தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் தூக்கிட்டுத் தற்கொலை - தற்கொலை

நிலக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

family commits suicide  three members of the same family commits suicide  suicide  mother son daughter suicide  dindigul news  dindigul latest news  திண்டுக்கல் செய்திகள்  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை  தற்கொலை  தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை

By

Published : Sep 27, 2021, 9:48 AM IST

திண்டுக்கல்: சிலுக்குவார்பட்டி ஊராட்சி கரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் (45), காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு முருகேஸ்வரி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், சவுந்தர்யா (13) என்ற மகளும் உள்ளனர்.

சந்திரபோஸ் இன்று (செப். 26) காலை வழக்கம்போல் காய்கறி வியாபாரத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி, மகன், மகள் மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

தற்கொலை

இது குறித்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இவர்களது தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியப் பெண் விமானப்படை அலுவலருக்குப் பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அலுவலர் கைது

ABOUT THE AUTHOR

...view details