திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கச்சியம்மாபட்டி வாய்க்கால் பாலம் அருகே நிலக்கோட்டையில் இருந்து சதீஸ் என்பவர் பூக்கள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற மினிவேன், சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
பின்னர் நிலைதடுமாறி சாலையின் எதிரே சென்று மற்றொரு இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தால் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.