ஆவின் பால் கொள்முதல் செய்ததில் கையாடல்: 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் - three aavin staffs suspended for milk corruption
திண்டுக்கல்: ஆவின் பால் கொள்முதல் செய்ததில் ரூ.1.5 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகக் கூறி மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் பொது மேலாளர்கள் இருவருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
![ஆவின் பால் கொள்முதல் செய்ததில் கையாடல்: 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் three aavin staffs suspended for milk corruption](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6889769-967-6889769-1587540889544.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆவின் பால் அலுவலகத்தில் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அவ்வாறு 2018-2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்யப்பட்டதாக ஆண்டு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆவின் விஜிலென்ஸ் குழு அறிக்கை தாக்கல் செய்ததால் இந்தத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி பொறியாளர்களான தினகர பாண்டியன், இந்துமதி, பண்ணை மேலாளர் சந்திரன் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து பொதுமேலாளர் ராமநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆவின் பொது மேலாளர்களாக இருந்த பாரூக் முகமது , டாக்டர். பிரபாகரன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.