திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று(ஜூன்.26) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார் சேவை பராமரிப்புப்பணிக்காக 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ஆகியவை மூலம் மலைக்கோயில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.