தூத்துக்குடி: ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் ஊர் ஊராக சென்று கோயில்களில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பூல் பாண்டியன் திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் யாசகம் எடுத்ததில் ரூ.10,000 கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாண்டியன், தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.10,000 ஆயிரத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகனிடம் வழங்கினார்.