தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட வந்த வீட்டில் எதுவும் இல்லாததால் பெட்ரோலை திருடிச் சென்ற திருடர்கள் - குற்றச் செய்திகள்

பழனியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது பணம், நகை ஏதும் சிக்காததால் , இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை மட்டும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 25, 2022, 10:58 PM IST

பெட்ரோல் திருட்டு

திண்டுக்கல்: பழனி புறநகர் பகுதியான திருநகர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரசேகரன். இவரது மனைவி ஓய்வுபெற்ற அரசு செவிலி கனகாத்தாள். இவர்களது மகன் கரூரில் தமிழ்நாடு காகித ஆலையில் பணிபுரிந்து வருகிறார். தங்களது மகனைப் பார்ப்பதற்காக சந்திரசேகரன் - கனகாத்தாள் இருவரும் நேற்று கரூர் சென்றனர்.

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் வீட்டிலிருந்த பீரோ மற்றும்‌ அலமாரிகளில் உள்ள பொருள்களைக் கலைத்துப் பார்த்துள்ளனர். அங்குப் பணம் மற்றும் நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து விரக்தியடைந்த திருடர்கள் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடிச் சென்றனர்.

காலையில் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி பழனி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டிலிருந்த எவ்வித பொருளும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:போலி தங்கம் விற்க முயன்ற வடமாநில நபர்கள் கைது: அம்பலமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details