தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Palani Temple: கோயிலிலும் கோஷ்டி மோதலா - பழனியில் பக்தர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு! - தைப்பூசத் திருவிழா

பழனி திருஆவினன்குடி கோயிலில் இருதரப்பு பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கோயில் நுழைவுவாயிலில் தகராறில் ஈடுபட்டு கற்கள் மற்றும் தேங்காய்களை வீசியதில் ஒருதரப்பினர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

There was commotion at the Palani Thiruavinankudi temple as devotees from both sides clashed
கோயிலிலும் கோஷ்டி மோதலா..! பழனியில் பக்தர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

By

Published : Feb 8, 2023, 6:27 PM IST

Palani Temple: கோயிலிலும் கோஷ்டி மோதலா - பழனியில் பக்தர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று கோவை மற்றும் எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.

பழனி திருஆவினன்குடி கோயிலுக்கு எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய சென்றபோது, அங்குள்ள கோயில் நுழைவுவாயிலில் நின்று கோவையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் மேளம் அடித்து கொண்டிருந்தனர். அப்போது எடப்பாடியைச் சேர்ந்த காவடி பக்தர்களும் மேளம் அடித்துக்கொண்டே வந்தனர்.

இதையடுத்து எடப்பாடி பக்தர்களை மேளம் அடிக்கக்கூடாது என்று கோவை பக்தர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஆனால், மேளம் அடிப்பதை நிறுத்தாமல் எடப்பாடி பக்தர்கள் தொடர்ந்து மேளம் அடித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு கோவையைச் சேர்ந்த பக்தர்களை கோயிலில் இருந்து வெளியேற்றி கோயில் நுழைவுவாயிலில் உள்ள இரும்புக்கேட்டை எடப்பாடி பக்தர்கள் பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவை பக்தர்கள் அப்பகுதியில் இருந்த கடைகளில் இருந்த தேங்காய், கற்கள் மற்றும் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து திருஆவினன்குடி கோயிலுக்கு வந்த அடிவாரம் போலீசார், கோயில்‌ முன்பு தகராறில் ஈடுபட்ட பக்தர்களை விரட்டி அடித்தனர். தொடர்ந்து காயமடைந்த எடப்பாடி பக்தர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோயிலில் இருதரப்பு பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: புதிய ரேசன் கடைக்கு திமுக நிர்வாகி முட்டுக்கட்டை; தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்!

ABOUT THE AUTHOR

...view details