திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சலி ரவுண்டானா பகுதியில் பேருந்து சென்றபோது அதில் பயணம் செய்த ஒரு இளைஞர் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, பயணி ஒருவரிடம் 500 ரூபாயை பறித்துக் கொண்டு, பேருந்திலிருந்து குதித்து ஓடினார்.
இந்நிலையில், பேருந்தில் பயணித்த ஒட்டன்சத்திரம் போக்குவரத்துக் காவலரான கார்த்தி, பேருந்திலிருந்து குதித்து திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். இதனையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் பணம் பறித்த திருடனை பிடித்து, வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிடிபட்ட திருடனை விசாரித்ததில் பெயர் மற்றும் ஊரை மாற்றி, மாற்றி கூறியுள்ளான்.