திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் சிவமுத்து. இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே செல்போன் பழுதுசெய்வது, செல்போன் உபகரணங்கள், ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் (ஆக.29) இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் நேற்று (ஆக. 30) காலை கடையைத் திறக்க அவர் வரவில்லை. ஆனால், செல்போன் கடை உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் சிவமுத்துவுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் வந்து கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த நகலெடுக்கும் இயந்திரம் (ஜெராக்ஸ் மிஷின்), செல்போன்கள், மடிக்கணினி, ரொக்கப்பணம் 12 ஆயிரத்து 500 உள்பட 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடுபோனது தெரிய வந்தது.