திண்டுக்கல்: கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனச் சுகாதார அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில் திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்துக்குள் 75 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கரோனா மூன்றாவது கட்டத்தை எட்டாத நிலையில் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த சிறப்பு மையத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனிடையே நேற்று (நவ.24) இரவு நேரத்தில் சிறப்பு மையத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இணைக்கும் நான்கு சிலிண்டர் இணைப்பு வால்வுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.