திண்டுக்கல் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 15 நாட்களாக அவர் கடையை திறக்கவில்லை.
இந்நிலையில் திருடர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். மேலும் கடை முழுவதும் பணம் சிக்குமா என்று தேடியுள்ளனர்.
சிசிடிவி கேமராவை உடைத்து திருட்டு பணம் இல்லாததால் சில்லறைக் காசுகளாக இருந்த 300 ரூபாயை எடுத்துக்கொண்டு, கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து ஓடிவிட்டனர்.
இதனிடையே கதவு திறந்திருப்பதைக் கண்டு கடை உரிமையாளர் சண்முகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள்: கரோனா பரவும் அபாயம்!