தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 8.71 லட்சம் பணம் பறிமுதல்! - Dindigul Election Flying Corps

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட எட்டு லட்சத்து,71 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப். 3) பறிமுதல் செய்தனர்.

ரூ. 8.71 லட்சம் பணம் பறிமுதல்
ரூ. 8.71 லட்சம் பணம் பறிமுதல்

By

Published : Apr 3, 2021, 6:05 PM IST

தமிழ்நாட்டில் ஏப். 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே. 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பணப்பட்டுவாடா

தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் பறக்கும் படையினர், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த மணக்காட்டூர் பேருந்து நிலையம் அருகே சிதம்பரம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப். 3) வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ரூ.8,71,950 பறிமுதல்

அப்போது, அவ்வழியாக வந்த வடமதுரையைச் சேர்ந்த செல்வகுமார் (29) என்பவர் ஓட்டிவந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் எட்டு லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்கப்பணம் இருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது, உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

நத்தம் வட்டாட்சியரிடம் பணம் ஒப்படைப்பு

இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட எட்டு லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பணத்தை நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: 'வேலூரில் ரூ.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்'

ABOUT THE AUTHOR

...view details