திண்டுக்கல்:பழனியில் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும் போகர் ஜெயந்தி விழாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதில் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என தன் வரவேற்பைத் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பல ஆண்டுகளாக இந்த விழா நடைபெற்று வருகின்றது.
வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருந்த போகர் ஜெயந்தி விழாவினை பழனி திருக்கோவில் நிர்வாகம் தடை விதிப்பதாக ஆணைப் பிறப்பித்து இருந்த நிலையில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்து இருந்தது.
இவ்வழக்கை விசாரணை செய்த டி.ஆர்.சுவாமி நாதன் , ஸ்ரீமதி நீதிபதிகள் கொண்ட அமர்வு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் இணை ஆணையர் மே 2ஆம் தேதி தடை விதித்துள்ளனர்.
இதுசட்டத்திற்கு புறம்பானது எனவும் பழனி கோயிலில் போகர் சந்நிதியை, தொன்று தொட்டு புலிப்பாணி சுவாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எனினும் கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்திய வீடியோ ஆதாரம் உள்ளது என்றும்; அதனால் போகர் ஜெயந்தி விழாவைக் கடந்த ஆண்டு போல நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.