தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், 34 வகையிலான கடைகள், உணவகங்கள் போன்றவற்றை திறப்பதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்கப்படும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பிற கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஒரு சில கடைகள் மற்றும் உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வரவு இல்லாததால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் டீக்கடைகள், உணவகங்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன. உணவகங்களில் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, பார்சல் வாங்க வருபவர்களிடம் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.