திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 35கிலோ மீட்டர் தொலைவில் மேலப்பள்ளம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜெயலலிதாவின் பெற்கால ஆட்சி தொடர்வதால் மக்களின் ஆதரவு அதிமுகவிற்கு இருக்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வெற்றி பெற்று திண்டுக்கல் அதிமுகவின் கோட்டை என்பதை உறுதி செய்யும்.