தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தின் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி! - பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர்

திண்டுக்கல்: வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அரசுப் பேருந்துகளின் மேற்கூரைகள் வழியாக மழைநீர் உட்புகுந்தததால் அவதிக்குள்ளான பயணிகள் அரசுப் பேருந்துகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The rain water entered into the government bus and Travellers was get suffered

By

Published : Nov 7, 2019, 10:37 PM IST

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பணிமனைகளிலிருந்து வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகள் தினமும் வந்து செல்கின்றன. இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் மேற்கூரைகளில் ஓட்டைகள் இருந்துள்ளன. இந்நிலையில், இன்று வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையினால் பேருந்துகள் முழுவதும் மழைநீர் ஒழுகியுள்ளது.

மேற்கூரை வழியாக பேருந்துக்குள் புகும் மழைநீர்

இதனால் பயணிகள் நனைந்தபடியே பேருந்துகளில் பயணம் செய்து வந்தனர். பேருந்து இருக்கைகள் முழுவதும் மழைநீரால் நனைந்ததால், இருக்கைகளில் அமர முடியாமல் குழந்தைகளையும் நிற்க வைத்து சென்ற காட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளின் பேட்டி

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கூரைகளை மாற்றி பேருந்துகளை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விபத்துக்கான இழப்பீடு தரவில்லை - அரசுப் பேருந்து ஜப்தி

ABOUT THE AUTHOR

...view details