தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி! - சாலையில் கிடக்கும் குப்பைகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே சாலையின் ஓரங்களில் சிதறிக் கிடக்கும் குப்பைகளால் சாலையை கடக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயத்திலுள்ள குப்பைகள்
தொற்று நோய் பரவும் அபாயத்திலுள்ள குப்பைகள்

By

Published : Jan 6, 2021, 7:16 AM IST

Updated : Jan 6, 2021, 7:22 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளான நாயுடுபுரம், செண்பகனூர், கீழ்பூமி, பாம்பே சோலா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, டிப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.

சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை துர்நாற்றம்வீசி வருகிறது. இதனை உண்ணும் விலங்குகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. மேலும், காற்று வீசும் நேரங்களில் குப்பை பரவி சாலை முழுவதும் சென்று விடுகிறது.

இதனால், அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே குப்பைகளை சேகரிக்க சாலை ஓரங்களில் குப்பைத் தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்று நோய் பரவும் அபாயத்திலுள்ள குப்பைகள்

இதையும் படிங்க: நேற்று இன்று நாளை தூத்துக்குடியில்... நீர் ஆதாரங்களை காக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!

Last Updated : Jan 6, 2021, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details