திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் தனிப்பிரிவு முதல்நிலை காவலராக பணிபுரிபவர் கங்காதரன். இவரது மகன் சித்தார்த் அபிமன்யூவின் முதலாமாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதைக்கொண்டாடும் விதமாக, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டை சோத்தாள்நாயக்கன் அணையின் கரையோரங்களில் தனது குடும்பத்துடன் வந்து 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊன்றினர்.
மேலும் 100க்கும் மேற்பட்ட ஆலங்கன்னு, நீர்மருது, சீத்தாக்கன்னு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.