திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆர்.எம். காலனியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் புதிய மைதானம் அமைக்கப்பட்டது.
இன்று இந்த மைதானத்தை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தப் புதிய மைதானத்தை திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து, இவ்விழாவில் பேசிய அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும்விதமாக இந்த மைதானம் அமைந்துள்ளது என்றார். இந்த மைதானத்திற்குத் தேவைப்படும் அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளும் அரசு சார்பில் சிறப்பாக செய்துதரப்படும் என்றும், விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த மைதானமாக இது தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்துவைத்தார் அதனைத்தொடர்ந்து மைதானத்தின் உள்பகுதியில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டுவைத்தார். இவ்விழாவில் மாநகர முன்னாள் மேயர் மருதராஜ், மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகி பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'கொரோனோ வைரஸை விட ஆபத்தானது திமுக குடும்பம்' - நடிகை விந்தியா