திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூனை கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் வீட்டின் முன்பாக மணல் கொட்டி வைத்துள்ளார்.
அவரது வீட்டின் அருகே இருந்த காந்திராஜனுக்கு அது இடையூறாக இருந்ததால் காந்தி ராஜனுக்கும் ஆனந்த்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த காந்திராஜன் ஆனந்த்குமாரின் வலது பக்க காதை துண்டாகும் அளவில் கடித்து துப்பிவிட்டார்.