தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபாயகரமான மின் பெட்டியை அகற்ற கோரிக்கை! - மின் பெட்டி விபத்து

திண்டுக்கல்: ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் பெட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

eb box Dindigul

By

Published : Oct 11, 2019, 9:49 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கேதையுறம்பு ஊராட்சி. இப்பகுதியில் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான மின்சார வாரிய அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தின் எதிர்புறத்தில் உள்ள மின்கம்பத்தில் தெரு விளக்கு பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள மின் பெட்டி குழந்தைகளின் கைக்கு எட்டும் வகையிலும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மின்பெட்டி

எனவே விபத்து ஏற்படும் முன்பே மின்சார வாரியமும் ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பெட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மூடப்படும் எனும் தகவல் முற்றிலும் பொய்' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.எஸ்.என்.எல்!

ABOUT THE AUTHOR

...view details