திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம் புதூர், கோம்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மானாவாரியாக பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட பருத்தி தற்போது கடுமையான வெம்பா பனியால் தாக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்திச் செடி முழுவதும் கருகி, பருத்திப் பிஞ்சுகள் காய்ந்து வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.