திண்டுக்கல்அருகே கொடைக்கானல் கூக்கால் தூத்தூர் அருவியின் பிரமாண்டமும், அதன் முன்னர் நிற்கும் பொழுது, உடல் வருடிச்சென்று வீசும் மூலிகைச்சாரலும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. அருவியின் பேரழகை சமூக ஊடகங்களில் சுற்றுலாப்பயணிகள் மேலும் பதிவிட, கூக்கால் கிராமத்தின் சுற்றுலா வாழ்வாதாரம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
அருவிக்கு அழைத்துச்செல்ல, கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வழிகாட்டிகளாக, குழு அமைத்து, அரசின் அனுமதியுடன் பதிவு செய்து, அருவியைக் காண வரும் பயணிகளிடம், கட்டணம் பெற்று, இரண்டு ஆண்டுகளாக அருவிக்குத் தொடர்ந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்சமயம் விவசாயத்தினால் நஷ்டம் அடைந்த சுமார் 100 விவசாய குடும்பத்தினர், ஓய்வு நேரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக மாறி, தங்களது வாழ்வாதாரத்தை சுற்றுலாவில் இருந்து ஈடுகட்டி வருகின்றனர். கூக்கால் கிராம ஏழை விவசாயிகள், கூலி வேலை பார்ப்பவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில், தூத்தூர் அருவி விளக்கேற்றி வைத்தது.
மகிழ்ச்சியில் திளைத்து இருந்த மக்களின் வாழ்வில், அந்த அருவி அமைந்துள்ள இடம் வனப்பகுதியோ அல்லது வருவாய் பகுதியோ, அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வழிமுறைகளை முறையாக ஏற்படுத்தி, கூக்கால் கிராம மக்களின் சுற்றுலா வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசு தலையிட்டு கூக்கால் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை இதையும் படிங்க:சென்னையில் கொலு பொம்மை, கலை நயமிக்க மண்பாண்டங்கள் கண்காட்சி...