திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, பொதுமக்களிடையே பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கரோனா தொற்று இரண்டாவது அலையின் பரவல் அதிகரிப்பு காரணமாக வேகம் எடுத்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள் - The general public interested in getting vaccinated
கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுச் செல்லும் சூழ்நிலை உள்ளது.
மேலும் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுச் செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் மருத்துவமனையில் போதியப் பணியாளர்கள் இன்றி மருத்துவ ஊழியர்கள் திணறினர். எனவே, கூடுதல் மருத்துவப் பணியாளர்களையும், தன்னார்வலர்களையும் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:'விரைவில் தென்காசியில் மருத்துவக் கல்லூரி' அமைச்சர் மா. சுப்பிரமணியன்!