திண்டுக்கல்: பழனியை அடுத்துள்ளது, ஆயக்குடி பேரூராட்சி. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி பேரூராட்சியில் வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மா, கொய்யா, சப்போட்டா, தென்னை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இரண்டு குழுவாகப் பிரிந்து சுற்றிவருகினற்ன. இந்நிலையில் ஆயக்குடி - புதுரோடு பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு யானைக்கூட்டம் புகுந்து, பயிர்களை நாசம் செய்துவருவதாக ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.