தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - உட்புறம் குடும்பத்தினர் தூங்கியதால் உயிர்சேதம் இல்லை

திண்டுக்கல்: பேகம்பூர் பகுதியில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிர் தப்பினர்.

தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

By

Published : Dec 4, 2019, 10:55 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர், புலவர் தெருவில் வசித்து வருபவர் ஜியாவுதீன். இவர் தனக்குச் சொந்தமான 50 வருட பழமையான வீட்டில் தனது இரண்டு மகன், இரண்டு மருமகள், 8 பேரக் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

திண்டுக்கல்லில் கடந்த 10 தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மழைநீரில் இவரது வீட்டின் சுவர்கள் ஊறி உறுதியற்ற நிலையில் இருந்ததுள்ளது.

இந்நிலையில் இவர்கள் அனைவரும் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டின் உள்புறம் உள்ள அறைகளில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

இன்று காலையில் வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உள்புறம் உள்ள அறையில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதம் இன்றி அனைவரும் உயிர்தப்பினர்.

இதையும் படிங்க: கோவை கட்டட விபத்து - பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details