திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த சி.கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). காவலரான இவர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பணியை முடித்து விட்டு ரஞ்சித்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது மனைவி அனுஷ்யாதேவிக்கும் இடையை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
குடும்ப பிரச்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்: செம்பட்டி அருகே குடும்ப பிரச்னை காரணமாக காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று காலை முதல் ரஞ்சித்குமார் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த சக காவலர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.