Banana Throwing Festival: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள 'சோலை மலை அழகர்' கோயிலில் ஒரு விநோதமான ருசிகரமான திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கோயில்களில் பொதுவாக, உள்ளங்கை அளவிற்கு பிரசாதமாக பொங்கலோ (அ) வேறு ஏதாவது உணவுப்பொருட்களையோ வழங்குவார்கள். அதிகப்படியாக பார்த்தேமேயானால், திருவிழாக்களின் போது அன்னதானம் அளிக்கப்படும். இத்தகைய நிலையில், தங்களின் வத்தலக்குண்டு அருகே ஒரு சுவை நிறைந்த சுவாரஸ்யமான விழா நடந்துள்ளது.
தங்களது தோட்டங்களில் விளைந்த வாழைப்பழங்களை 'சோலை மலை அழகர்' கோயிலுக்கு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினால் நேர்த்திக்கடனாக வழங்குவதாக இங்குள்ள பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு நிறைவேறிய தங்களது நேர்த்திக்கடனுக்காக 'சோலை மலை அழகர்' கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக இன்று (ஜன.18) அழகருக்கு காணிக்கையாக வழங்க வாழைப்பழத்தை மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் கொண்டு வந்தனர். தொடர்ந்து கூடை கூடையாக 200-க்கும் மேற்பட்ட கூடைகளில் கொண்டுவந்த ஆயிரக்கணக்கான வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையாக வீசினர்.