தைப்பூசத் திருவிழா கோலாகலம் திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று (பிப்.4) நிறைவு பெற்றது. இந்நிலையில் 8ஆம் நாள் திருவிழாவான இன்று (பிப். 5) பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் குவிந்துள்ளனர்.
அதிகாலை மூன்று மணி முதல் தற்போது வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் பழனி அடிவாரம் பகுதியில் இருந்து பக்தர்கள் தடுப்புகள் வைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து அலைகடல் போக் திரண்டு வந்திருக்கும் பகதர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மழை வெள்ளம் போல் பக்தர்கள் குவிந்துள்ளதால் பல்வேறு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Thaipoosam: கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. பக்தர்கள் சாமி தரிசனம்!