தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்! - கோயில் தேரோட்டம்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் பக்தர்களின் ஆரவாரத்தோடு விமரிசையாக நடைபெற்றது.

thadicombu_perumal_kovil_chariot

By

Published : Aug 16, 2019, 8:33 AM IST

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இங்கு ஆடித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீசௌந்திராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. பழனி இணை ஆணையர் நடராஜன் கொடியசைக்க மகா தீபாராதனைக்குப் பிறகு தேர் வடம் பிடிக்கப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்துச் சென்றனர்.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details