திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ளது கோதைமங்கலம் ஊராட்சி. இங்குள்ள பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் உள்ள பாப்பான்குளம் கரையில் கன்னிமார் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை நேற்று (ஜூன்.01) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
பழனியருகே கோயில் சிலை உடைப்பு - Palani taluk police station
திண்டுக்கல்: பழனியருகே கோயில் சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பழனியருகே கோயில் சிலை உடைப்பு
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தாலுகா காவல் துறையினர், சிலை உடைக்கப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து பழனி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை உடைத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.