திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். தொடர்ந்து தற்போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் நடைபெற்று வருகிறது.
இங்கு பயிலும் மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கும் வகையில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வீடுகள் மற்றும் தெருக்களில் வைக்கப்படும் குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிறையும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத்தகவல் அளிக்கும் வகையில் ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரிமோட் கண்ட்ரோல் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தச்செயலி மூலம் தனது பாதுகாவலருக்கு, தான் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தகவல் அளிக்கலாம். இதுகுறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் கூறுகையில், “இங்கு பயிலும் இரண்டு மாணவிகள் தைவான் நாட்டிற்குச்சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நான்கு மாதங்கள் தங்கி, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளார்கள்.
கொடைக்கானல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளைச்சேர்ந்த பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இணையலாம். அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் பேட்டி இதையும் படிங்க:மனித குலம் முன்னெப்போதும் பார்த்திராத அதிசயம் - ஆதி பிரபஞ்சத்தை படம் பிடித்த தொலைநோக்கி