தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உபயோகமில்லாத தண்ணீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

திண்டுக்கல்: உபயோகமில்லாத தண்ணீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மாலை அணிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

By

Published : Jul 8, 2020, 10:06 PM IST

திண்டுக்கல் மாநகராட்சி 14ஆவது வார்டுக்கு உட்பட்ட கோபால் நகரில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சின்டெக்ஸ் டேங்க் - மோட்டார் வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இன்று வரை தண்ணீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், உடனடியாக பழுதுகளை சரிபார்த்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று (ஜூலை 8) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சின்டெக்ஸ் டேங்கிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details