தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sexual Harassment: பழனியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது - Dindigul latest news

பழனி அருகே செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

teacher-arrested-for-sexually-harassing-in-palani
teacher-arrested-for-sexually-harassing-in-palani

By

Published : Nov 27, 2021, 12:23 PM IST

திண்டுக்கல்: பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் 30 வயதுடைய ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படித்துவரும் மாணவிக்கு கடந்த ஓராண்டாக திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிவந்தார்.

மேலும், அந்த மாணவியைத் தனது வீட்டிற்கு அவ்வப்போது அழைத்துச் சென்று அவரிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுவந்தார்.

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, தாயார் உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரைக் கைதுசெய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Sexual Harassment: அரியலூரில் ஆசிரியர்கள் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details