திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்குத் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் தன்னார்வலர்கள் சிலர் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கிவருகின்றனர்.