காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Jeep Driver, Office Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Jeep Driver – 5
Office Assistant – 4
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 34, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 34, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37, ஆதரவற்ற விதவைகளுக்கு 42, மாற்றுத்திறனாளிகளுக்கு 42, முன்னாள் ராணுவத்தினருக்கு 50 என அதிகப்பட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Jeep Driver – ரூ. 19,500 முதல் ரூ.62,000
Office Assistant – ரூ. 15,700 முதல் ரூ.50,000
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/09/2022091219.pdf என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ”மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 154 வளர்ச்சிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் 624004” என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.10.2022ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!