'தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்' - மீண்டும் உறுதிபட கூறிய முதலமைச்சர்! - Tamilnadu CM Edappadi Palaniswami opensup about NEP2020
!['தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்' - மீண்டும் உறுதிபட கூறிய முதலமைச்சர்! 'தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்' - மீண்டும் உறுதிபட கூறிய முதலமைச்சர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8314888-494-8314888-1596703182957.jpg)
12:56 August 06
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் சென்ற முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, ' தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்; அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை' என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் , 'இ-பாஸ் தருவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும்; இ- பாஸ் சிக்கல்களைக் களைய கூடுதலாக ஒரு குழு என அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன' எனவும் தெரிவித்தார். அதேபோல், ’பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் மீண்டும் சேர்ப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே எஸ்.வி.சேகர் குறித்து பேசிய முதலமைச்சர், 'வழக்கு வந்தால் எஸ்.வி.சேகர் ஒளிந்துகொள்வார் என்றும்; எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் முதலில் எஸ்.வி.சேகர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்?' எனவும் கடுமையாக சாடினார்.