தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்! - tamilnadu people suffer in srilanka

திண்டுக்கல்: இலங்கையில் கச்சத்தீவு திருவிழாவிற்காக ஜவுளி வியாபாரம் செய்ய சென்ற வியாபாரிகள் ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்!
இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்!

By

Published : Apr 12, 2020, 7:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கண்டாங்கி மற்றும் பட்டு சேலைகளுக்கு மிகவும் பிரபலமானது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றது. ஆதலால் இங்குள்ள வியாபாரிகள் பலர் துணி வியாபாரம் செய்வதற்காக அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா செல்வது வழக்கம்.

அந்தவகையில், கடந்தமாதம் இலங்கையில் அந்தோணியார் திருக்கோயில் திருவிழா கச்சத்தீவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, குண்டலப்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான ஜவுளி வியாபாரிகள் வியாபாரத்திற்காக இலங்கை சென்றிந்தனர்.

இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இலங்கையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, இடம், மருத்துவ வசதி ஏதும் இன்றி தவித்து வருகின்றனர்.

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்!

இதுகுறித்து நம்மிடையே சின்னாளபட்டியில் சேர்ந்த ஜவுளி வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில், தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளான கொழும்பு, மன்னார், குத்தலம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி ஆகிய பகுதிகளில் எப்போதும் வணிகம் செய்வோம். அப்படி கச்சதீவு திருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான வியாபாரிகள் இலங்கைக்கு வந்திருந்தோம். கரோனா எதிரொலியாக சர்வதேச விமான சேவை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் இங்கு மாடிக்கொண்டோம். மத்திய , மாநில அரசுகள் தங்களை மீட்க உதவ வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள்: கரோனா பரவும் அபாயம்!

ABOUT THE AUTHOR

...view details