தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவை டார்கெட் செய்யும் பொன்.மாணிக்கவேல்? - ஐஜி டூ ஆன்மிக சொற்பொழிவாளர்...! - முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை இட வேண்டும்; அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ ஆண்டவனுக்கு பிச்சை இடக்கூடாது, ஆகவே தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை என்பது தேவை இல்லை என முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

"இந்து அறநிலையத்துறை என்பதே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை”- முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்
"இந்து அறநிலையத்துறை என்பதே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை”- முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

By

Published : Nov 20, 2022, 11:10 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உலக சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மற்றும் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் முன்னாள் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேசுகையில், ’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் புனரமைப்புப் பணிக்காகவும், வளர்ச்சிப் பணிக்காகவும் யாரும் உண்டியலில் பணம் போடக்கூடாது.

அதற்குப் பதிலாக அர்ச்சகர்கள் வாழ்வாதாரத்தை முன்னிட்டு தட்டில் பணம்போட வேண்டும். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கும் பிச்சையிட வேண்டும். அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ, ஆண்டவனுக்கு பிச்சையிடக்கூடாது.

இந்து அறநிலையத்துறை என்பதே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. கோயில் கல்வெட்டுகளில் இருந்து அதிகாரிகளின் பெயர்களை வெட்டி எடுக்க வேண்டும். சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள புராண காலத்து தெய்வச் சிலைகளை அந்தந்த கோயில்களில் உடனடியாக வழங்கி மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அரசை சந்தித்து மனு கொடுப்பது என்பது எங்களுக்கு கிடையாது. அரசு எங்களை சந்தித்து இதனை செய்து தர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சார்ய சுவாமிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’திண்டுக்கல் மலைக்கோட்டையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்களிடம் ஒப்படைத்து வழிபாடு நடத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

"இந்து அறநிலையத்துறை என்பதே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை”- முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

இதையும் படிங்க:"சென்னையில் குடிநீர் பிரச்னையே இல்லை, அந்த அளவுக்கு மழை பெய்கிறது" - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details