திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் ஒருவர் இறந்துள்ளார். அவரது துக்க நிகழ்வானது நேற்று திண்டுக்கல்லில் உள்ள மயானத்தில் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் அதே பகுதியைச் சேர்ந்த பாலுச்சாமி, சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு திரும்பிய, அவர்கள் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக இருவரும் கிணற்றில் சிக்கி, வெளி வர முடியாமல் போராடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.