தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch video: பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - தினண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்

By

Published : Nov 10, 2021, 11:22 AM IST

திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் நேற்று நவ.09 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்றது.

கடந்த நவ.4 ஆம் தேதி, காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.09 ஆம் தேதி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில்

சக்திவேல் கொண்டு வதம்

மலைக்கோயிலிலிருந்து முருகப் பெருமான், மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சக்திவேல் வாங்கி வந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ, வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் சின்னக்குமாரர் சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்

திருக்கல்யாணம்

சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கடந்தாண்டு போலவே பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹாரத்தில் அசுரர்களை வென்றதைத் தொடர்ந்து, இன்று நவ.10 ஆம் தேதி வள்ளி, தெய்வயானை சமேத சண்முகருக்குத் திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.

மயில் வாகனத்தில்

திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, பழனியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டவர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்‌ கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காருக்குள் சிக்கி ஆற்றில் தத்தளித்த 5 நபர்கள் - துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details