தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் கொள்முதல்: சூரியகாந்தி விவசாயிகள் கவலை!

குறைந்த விலைக்கு வெளிநாட்டிலிருந்து சூரியகாந்தி விதையை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் ஒட்டன்சத்திரம் பகுதி சூரியகாந்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சூரியகாந்தி விவசாயிகள் கவலை
சூரியகாந்தி விவசாயிகள் கவலை

By

Published : Jul 24, 2021, 6:18 AM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டி, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் சூரியகாந்தி மானாவாரியாக பயிரிட்டுள்ளனர்.

இந்த மருத்துவ குணம் நிறைந்த சூரியகாந்தி விதைகள் மூலம் சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றன.

இந்நிலையில் ஒரு கிலோ சூரியகாந்தி விதை 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்ற எண்ணத்தில் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு தற்போது ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் கவலையடைந்துள்ளனர்.

மேலும், விலை குறைந்ததற்கான காரணத்தை வியாபாரிகளிடம் கேட்டதற்கு, சூரியகாந்தி விதையை தமிழ்நாட்டில் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதால் தான் இந்த விலை குறைவானதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

கோடை காலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள், சூரியகாந்தி மூலம் லாபத்தை ஈட்டலாம் என நினைத்துள்ளனர். எங்களுக்கு இவ்வளவு சோதனைகள் வரக்கூடாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details