தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து அமைப்பால் 'சுல்தான்' கார்த்திக்கு ஏற்பட்ட சிக்கல்! - கார்த்தி புதிய படம்

திண்டுக்கல்: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

karthi

By

Published : Sep 25, 2019, 12:03 PM IST

திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மாதந்தோறும் சிவனடியார்கள் கிரிவலம் வருவார்கள். இதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில் ஹைதர்அலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு சுல்தான் திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு மலைக்கோட்டையில் கடந்த 10 நாட்களாக நடைப்பெற்றுவருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கார்த்திக்கும் கலந்துகொண்டு வருகிறார். படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடைபெற்றுவந்தது.

படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்பினர்

இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் மலைக்கோட்டையை முற்றுகையிட்டு படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி தகவல் கிடைத்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று அக்கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் காவல் துறையினரிடம் கிரிவலம் செல்ல அனுமதி இல்லாதபோது படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. மலைக்கோட்டையிலிருந்து படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் அக்கட்சியினர் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details