தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்! - தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல்: நில மோசடி தொடர்பாக ஐந்து முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில் பெண் ஆட்சியர் அலுவலகக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

By

Published : Jun 24, 2019, 1:17 PM IST

Updated : Jun 24, 2019, 8:42 PM IST

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம் - சாந்தி தம்பதி. இவர்களுக்கு திவ்யா, அகிலா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். பூட்டு வேலை செய்துவரும் வேலாயுதம் கடும் வறுமைக்கு இடையே வேடப்பட்டியில் இருந்து கண்ணார்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள நிர்மல் நகர் என்ற பெயரில் இடம் விற்பனை செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அலிபாய் என்பவரிடம் 1000 சதுரஅடி மனையை 85 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த மனையை பத்திரப்பதிவு செய்யச் சென்றபோது அந்த இடம் பஞ்சமி நிலம் என தெரியவந்தது.

இதையடுத்து நிலம் விற்றவரிடம் பத்திரப் பதிவு செய்யாததால் பணத்தை திருப்பித் தரக்கோரி வேலாயுதம் பலமுறை வலியுறுத்தியும் அலிபாய் இழுத்தடித்ததாகத் தெரிகிறது .

இது தொடர்பாக ஐந்து முறைக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள்,காவல்துறையினரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில் மனமுடைந்த வேலாயுதம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்தார்.

அப்போது அவரது மனைவி சாந்தி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து காப்பாற்றி தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற பெண்
Last Updated : Jun 24, 2019, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details